பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முக கவசம் அணிவது கட்டாயம்
முக கவசம் அணிவது கட்டாயம்

Mk Stalin: சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அவர் கூறியதாவது:

  • கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தி.மு.க. அரசு எடுத்தது.
  • அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.
  • தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
  • கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
  • கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: Corona Vaccine: கோவிஷீல்டு, கோவேக்சின் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா?