State Congress President DK Sivakumar : சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு யாராவது முதலமைச்சர் ஆகட்டும்: டி.கே. சிவகுமார்

பெங்களூரு: Let someone from the Congress party become the Chief Minister after the assembly electionsசட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் யாராவது முதலமைச்சர் ஆகட்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு தெற்கு தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் சார்பில் 75 வது சுதந்திர தின நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக பெங்களூரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சின் தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்க்கும் வகையில் இட இடஒதுக்கீடு பட்டியலை அரசு அறிவித்துள்ளது. இதற்கு எங்கள் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலகத்துக்கு பாஜக அலுவலகம் சென்று பட்டியலை திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஜனநாயக அமைப்பில் இது போன்ற செயல்களை அரசு செய்தது தவறு என்று கூறுவது எங்களின் கடமையாகும்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின‌ பெண்களுக்கான இடஒதுக்கீடுகள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை (Reservations are not properly distributed). பொம்மனஹள்ளி தொகுதியில் உள்ள 14 வார்டுகளில் 9 வார்டுகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஜெயநகரில் ஒன்பது வார்டுகளில் 8 வார்டுகளும், பிடிஎம் லேஅவுட்டில் 8 வார்டுகளும், காந்தி நகரில் 7 வார்டுகளும், சாமராஜ்பேட்டையில் 6 வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏ தொகுதிகளின் மொத்தமுள்ள 93 வார்டுகளில் 76 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது நியாயமானதா அல்லது நியாயமற்றதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். நேரு அலகாபாத் மாநகராட்சி தலைவராகவும் பணியாற்றினார். பெங்களூரு மாநகராட்சி தலைவராக கெங்கல் ஹனுமந்தையா பணியாற்றியவர். விலாஸ் ராவ் தேஷ் முக் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். பி.டி.ஜட்டி பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். தற்போதைய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். வருங்கால எம்எல்ஏக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தல்.

நாங்கள் பெங்களூரில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். மக்கள் பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக அரசை ஆட்சியிலிருந்து கீழே இறக்க நினைக்கின்றனர் (They want to bring down the BJP government from power). ஒரு காலத்தில் பசவனகுடி, ராஜாஜிநகரில் வெற்றி பெற முடியாது என்று கூறி வந்தனர். எஸ்.எம் கிருஷ்ணாவின் ஆட்சிக்குப் பிறகு, எங்கள் கட்சி நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வரலாறு உண்டு. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதே எங்களது நோக்கமாகும். ஆனால் வாய்ப்பை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இடஒதுக்கீட்டை ஒரு சாராக‌ மையப்படுத்துவது மிகவும் அநீதியாகும். போராட்டத்தை தொடரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் கூறியுள்ளோம். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, பட்டியலை சரிபார்க்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக தனி கூட்டம் நடத்துவோம். தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது, தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஆக. 15 ஆம் தேதி சங்கொல்லி ராயண்ணா சதுக்க‌த்தில் இருந்து பசவனகுடி தேசிய கல்லூரி மைதானம் (Basavangudi National College Grounds)வரை தேசிய கொடியுடன் சுதந்திர ஊர்வலம் நடந்த முடிவு செய்துள்ளோம். அன்று மாலையில் கலாசார நிகழ்ச்சி நடைபெறும். இது அரசியல் சார்பற்ற நிகழ்வு. இதில், மாணவர்கள், அமைப்புகள், பணியாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே 29,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தில் பங்கேற்பவர்கள் ரயில்வே சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயணத்திற்கு பயன்படுத்த வேண்டும். தங்களின் சொந்த வாகனப் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி மெட்ரோ பயணிகளுக்கு 50 சதம் விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இது இந்த நாட்டின் சுதந்திர தினம். அதை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். இந்த வாய்ப்பு நமக்கு மீண்டும் கிடைக்காது. பாஜக கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் வீடு வீடாக தேசியக் கொடி வழங்க ரூ. 25 நிர்ணயம் செய்துள்ளனர். தேசியக் கொடியை அரசே இலவசமாக வழங்கியிருக்கலாம் (The national flag may have been provided by the government for free). எங்களிடம் பதிவு செய்பவர்களுக்கு 1.5 லட்சம் தேசிய கொடி, தொப்பி, சட்டை இலவசமாக வழங்குவோம். பலர் ஊமைப் படங்களைத் தயாரிக்கத் துணிந்துள்ளனர். கலைஞர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டத்தை செய்ய அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்த திட்டத்தை செய்ய பரிந்துரைத்தது. மற்ற மாநிலங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். நம் மாநிலத்துக்கு யார் வருவார்கள் என்பதை தற்போது கூறமாட்டேன் என்றார்.

பெங்களூரு மாநகராட்சியில் வார்டு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக கூறியது. வார்டு மறுவரையறை விவகாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஒரு ஆட்சேபனைக்கு கூட அரசு பதிலளிக்கவில்லை. யாருடைய கருத்தையும் கேட்காமல் அனைத்து எதிர்ப்புகளையும் அரசு தள்ளுபடி செய்தது. சங்பரிவார் அலுவலகங்களில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளனர். அவர்கள் ஏதாவது செய்து கொள்ள‌ட்டும், நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை (Faith in the democratic system) வைத்திருந்தால் உடனடியாக தேர்தலை நடத்தியிருப்பார்கள். இப்போது நீடிக்கிறது. தேர்தலை நடத்துவதற்கு தோல்வி பயத்தில் உள்ளனர். எங்கள் கணக்கெடுப்பின்படி, தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுப்பார்கள். மாநிலம் முழுவதும் எத்தனை சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின‌ வாக்காளர்களின் பெயர்கள் ,வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளன என்பது குறித்த அதிகாரப்பூர்வ பதிவுகள் எங்களிடம் உள்ளன. கூடிய விரைவில் அதனை வெளியிடுவோம். யாராவது முதலமைச்சராகவும், அமைச்சராகவும் ஆகட்டும். அது அவர்கள் விருப்பம். மாநிலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நல்லாட்சியை வழங்கி மக்களுக்கு நீதி வழங்குவதே என‌து நோக்கமாகும் என்றார்.