Kamal Nath: காங்கிரஸ் தலைவராவதில் எனக்கு விருப்பமில்லை என முன்னாள் முதல்வர் கமல்நாத் விளக்கம்

Congress president poll : காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டெல்லி: Kamal Nath : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவி வரும் வதந்திகளை மறுத்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை கமல்நாத் சந்தித்துப் பேசியதையடுத்து, அவர் இம்முறை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த கமல்நாத், காங்கிரஸ் தலைவராவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் எனக்கு விருப்பமில்லை. நான் நவராத்திரி அன்று டெல்லி வந்தேன் என்று கமல்நாத் தெளிவுபடுத்தினார். ராஜஸ்தானில் ( Rajasthan) நிலவி வரும் முழு அளவிலான அரசியல் நெருக்கடியை அமைதிப்படுத்த மத்தியஸ்தராக கமல்நாத் கட்சிக்கு ஆதரவளிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த மாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் (Ashok Gehlot and Shashi Tharoor) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால், அக்கட்சியின் ஒரு நபர், ஒரே பதவி என்ற விதியின் கீழ் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி முடிவடையும் என்றும், அக்டோபர் 19-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அஜய் மாக்கன் 9Mallikarjuna Kharge and Ajay Maken) ஆகியோர் ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கினர், மேலும் கட்சியின் மாநில பிரிவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையை இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.