Gayathri Raguramm Twit: உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? அண்ணாமலையை வச்சு செய்யும் காயத்ரி ரகுராம்

சென்னை: பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமுக்கு (Gayathri Raguramm Twit) எதிராக சிலர் யூடியூப் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பா.ஜ.க.வினர் பகிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி காயத்ரி ரகுராம் வெளிப்படையாக ட்விட்டர் பதிவின் மூலமாக தெரியப்படுத்தி வருகிறார். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்தும் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், இன்று காயத்ரி ரகுமார் தனது ட்விட்டர் பதிவில், அண்ணாலை வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா??? நீங்கள் தாக்கலாம் ஆனால் கவனமாக தாக்கலாம் என்பது உங்கள் வார்ரூம் அணிக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை. இது ஆரம்பத்திலிருந்தே எதையும் தாக்குவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது போன்றது. ஒரு கூட்டத்தில் 150 பேர் முன்னிலையில் நீங்கள் என்னைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்ப செய்தீர்கள் இதைத்தான் இப்போது வார்ரூம் என்னைத் தாக்க அதே காரணத்தை எடுத்துக்கொள்கிறது.

கூட்டத்தில் என்னைப் பற்றி நீங்கள் வதந்திகளைப் பரப்பினீர்கள் என்றால் நான் கட்சியில் வளர்ந்து வருகிறேன் என்று அர்த்தம். இதே தானா என் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை கொடுத்து இருந்ததால தானா நான் ராஜினாமா செய்தேன் என்று சொன்னதும் அவசரமாக என்னை கட்சியில் இருந்து நீக்குனீங்க? இவ்வாறு காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.