Gayathri Raghuram Walk against BJP: பாஜகவுக்கு எதிராக நடைபயணம்: காயத்ரி ரகுராம் அதிரடி

சென்னை: Gayathri Raghuram has announced an anti-BJP walk from Chennai to Kanyakumari. சென்னை முதல் கன்னியாக்குமரி வரை பாஜகவுக்கு எதிரான நடைபயணத்தை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

பாஜகலிருந்து 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன் என காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பதிவில் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதோடு தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அண்ணாமலை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தான் காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் யார் வேண்டுமானாலும் தன்னுடன் இணையலாம் என்றும்,எந்த அச்சுறுத்தலுக்கும் தான் பயப்படவில்லை என்றும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்த நடைபயணம் நடத்துவதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.