சென்னை: முன்னாள் முதலமைச்சர் (Mgr Memorial) எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வாசிக்க, அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, எம்.ஜி.ஆரை நெஞ்சிலே தாங்கி அவர் விட்டு சென்றிருக்கும் பணிகளை லட்சிய பாதையில் தடம் மாறாமல் பயணிப்போம்.

குடும்ப அரசியலின் மொத்த வடிவம் தி.மு.க., அந்த கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம். மக்கள் சக்தியாம் எம்.ஜி.ஆரின் துணை கொண்டு அவர் வகுத்து கொடுத்த பாதையில் வீறு நடை போடுவோம். ஜெயலலிதாவின் வழியில் 40 தொகுதிகளையும் வெற்றி கொள்வோம்.
மேலும், நீட் தேர்வு விலக்கு எங்கே, கல்விக்கடன் ரத்து எங்கே, டீசல் விலை குறைப்பு எங்கே, கேஸ் சிலிண்டர் மானியம் எங்கே, மகளிருக்கு கொடுப்பேன் என்று சொன்ன ரூ. ஆயிரம் எங்கே, பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 எங்கே, செங்கரும்பு எங்கே இது போன்ற மக்களின் கேள்விக்கு விடியா திமுக அரசின் பதில் எங்கே, அந்த அரசை வீட்டு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தியை பார்க்க:இந்தியாவின் கல்வி முறையை பார்த்து பிரதமர் மோடி பெருமிதம்
முந்தைய செய்தியை பார்க்க:Villupuram Murder: கடன் கொடுத்தவரையே தீர்த்துக்கட்டிய மகன்; உடந்தையான தாய் கைது