டெல்லி: இந்தியாவின் எதிர்காலத்திற்காக புதிய கல்விக்கொள்கை (PM Modi Is Proud) தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதமாக கூறியுள்ளார்.
ராஜ்கோட் ஸ்ரீசுவாமிநாராயன் குருகுலத்தின் 75வது அமிர்த பெருவிழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி மிக, மிக முக்கிய பங்கு வகிக்கும். ணூல்வி உள்கட்டமைப்பு அல்லது புதிய கல்விக்கொள்கை எதுவாக இருந்தாலும், மத்திய அரசு கல்வித்துறையை மிக வேகமாக மாற்றியமைத்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அதன் பின்னர் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. 2014க்கு பின்னர் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் முன்னோக்கி செல்லவும் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்வி முறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இளைஞர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்பட்டால் இந்தியாவை அமிர்த காலத்தை நோக்கி வழிநடத்தும் சிறந்த குடிமக்கள் உருவாக்கப்படுவார்கள். எப்போதுமே குருகுல கலாசாரம் அனைத்து மாணவர்களின் எண்ணங்களையும், மதிப்புகளையும் உயர்த்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.