Interim General Secretary Of Aiadmk For The Party: எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளர்: தேர்தல் ஆணையம் கொடுத்த சர்ப்ரைஸ்

சென்னை: 2021,2022ம் ஆண்டுக்கான அ.தி.மு.க. (Interim General Secretary Of Aiadmk For The Party) வரவு செலவு கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. அதாவது இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகள் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது. இதன் பின்னர் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி தேர்வு செய்து அதனை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியிருந்தது. இதற்கு இடையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றார்.

ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதன் பின்னர் அ.தி.மு.க.வின் 2021, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குளை, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இதுவரை தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. விவகாரத்தில் எந்த தலையீடும் செய்யாமல் இருந்து வந்தது. அதன்படி 2021, 2022ம் ஆண்டுக்கான அ.தி.மு.க. வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டது.

இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் ஓ.பி.எஸ். அணிக்கு மிகப்பெரிய இடியாக விழுந்துள்ளது எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Gst For Tamilnadu Arrears Only Rs 1200 Crore: தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே: நிர்மலா சீதாராமன் தகவல்

முந்தைய செய்தியை பார்க்க:Johnny Depp and Amber Heard Divorce Case: ஒரு வழியாக முடிவுற்ற ஜானிடெப், ஆம்பர்ஹெர்ட் வழக்கு