Gst For Tamilnadu Arrears Only Rs 1200 Crore: தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே: நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. (Gst For Tamilnadu Arrears Only Rs 1200 Crore) பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகை 10 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என்று சில எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் பதில் அளித்தனர். அதன்படி கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி நிலுவையில் இருப்பதாக இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியிருந்தார்.

அதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, தற்போதைய நிலையில் நிலுவையில் உள்ள தொகைகள் ஓரளவுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. நிலுவையில் ரூ.17,000 கோடி உள்ள நிலையில் அதுவம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

மேலும், தமிழகத்துக்கு ஜூன் 2022ம் ஆண்டின் படி நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.1,200 கோடி மட்டுமே. அதுவும் மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்காததால் அதனை நிலுவை தொகையாக கருத முடியாது என்றார்.

முந்தைய செய்தியை பார்க்க:Admk Raj satyan Condemnation: கரூரில் காட்டாட்சியா நடக்கிறது? போலீஸ் துணையுடன் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்துவதா: ராஜ்சத்யன் கண்டனம்

முந்தைய செய்தியை பார்க்க:Admk councillor kidnapping: கரூரில் பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தல்: முன்னாள் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்