Dmk Minister Nasser Attack: தி.மு.க. நிர்வாகியை கல்லால் அடித்த அமைச்சர் நாசர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் (Dmk Minister Nasser Attack) கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி ஒருவர் மீது கல் வீசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேடை அமைக்கின்ற பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் உட்காருவதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகி ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாக ஒரே ஒரு இருக்கை மட்டுமே எடுத்து வந்துள்ளார். இதனை பார்த்த அமைச்சர் நாசர் அவர் மீது கல் எறிந்து வீசினார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.