Annamalai: கோவையில் துப்புரவுத் தொழிலாளர் போராட்டத்திற்கு கே.அண்ணாமலை ஆதரவு

K Annamalai support to sanitation workers protest in Coimbatore
Image credit to News Next Tamil

Annamalai: கோயம்புத்தூரில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, நான்காவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை இன்று நேரில் சென்று சந்தித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 62, துப்புரவு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு, ₹770 சம்பளம் வழங்க அறிவுறுத்திய சூழலில், மாநகராட்சி நிர்வாகம், ₹540 மட்டுமே வழங்கி வருவதாகத் தெரிகிறது.

K Annamalai support to sanitation workers protest in Coimbatore
Image credit to News Next Tamil

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் பணியாற்றும் 5,668 தூய்மைப் பணியாளர்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், இதுவரை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம ஊதியம் வழங்கும் அரசாணை எண் 62 ஐ அமல்படுத்துவதோடு, அவர்களுக்கான சம்பள ரசீது, இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.