AIADMK head office sealed : அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல்

aiadmk-head-office-sealed-by-revenue-department

சென்னை: AIADMK head office sealed : ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்தனர்.

இதனையடுத்து பொதுக்குழு அமைத்து தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து, திங்கள்கிழமை அவர்கள் அணி சார்பில் அதிமுக பொதுக்குழுவை வானாவரத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றம் விசாரணை நடத்தி, பொதுக்குழுவை நடத்தலாம் என்று திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தீர்ப்பு அளித்தது.

இதனைத் தொடர்ந்து வானாவரத்தில் அதிமுக பொதுக்குழு எடிப்பாடி பழனிசாமி அணியால் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் பிரசார வேனில் வந்த ஓ. பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன் பிறகு அதிமுக அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் கிழிக்கப்பட்டன, போட்டோக்கள் உடைக்கப்பட்டன.

இதனையடுத்து அங்கு வந்த போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் பன்னீர் செல்வத்தை வெளியேறுமாறு கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் அங்கேயே தர்னாவில் ஈடுபட்டார். அவரை வெளியேற்றிய அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். வானாவாரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.