Foreign currency seized : திருச்சி விமான நிலையத்தில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி : அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சுங்கத்துறை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திங்கள்கிழமை திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில், வெளிநாட்டு கரன்சி கடத்தவிருப்பதாக, சுங்கத்துறை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்ற அதிகாரிகள் துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், அவர்கள‌து உடைமைகளையும் சோதனை செய்த‌னர். சோதனையில், மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை துபாய்க்கு எடுத்து செல்ல இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கரன்சியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பயணிடம் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கரன்சி எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.