Veerapandiya Kattabomman Birthday: வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்த தினம்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மனின் (Veerapandiya Kattabomman Birthday) 263வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது பல கொடுமைகள் செய்யப்பட்டது. இதனை கண்டு ஆத்திரமடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்தார். இதனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தனது உயிரை நீத்தார். இவரது வீரத்தை போற்றும் வகையில் இன்று அவரின் பிறந்த தினத்தில் பல அரசியல் தலைவர்கள் மலர் தூவியும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.