we made heavy heartly Eknath Shinde as a CM : கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கினோம்: மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்

பாஜக கட்சி மேலிடமும், தேவேந்திர ஃபட்னாவீஸும், ஏக்நாத் ஷிண்டேவை மாநிலத்தின் முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

மும்பை : Maharashtra BJP President Chandrakant Patil : கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கினோம் என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (Sunday in Mumbai) பாஜக தொண்டர்களிடையே அவர் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். பாஜகவின் ஆட்சி மாநிலத்தில் அமைத்துள்ளது மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

ஆனால் மாநிலத்தின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவீஸ் (Devendra Fadnavis) மாநிலத்தின் முதல்வராக ஆவார் என்று எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் அவர் முதல்வராக ஆகாதது வருத்தம் அளிக்கிறது.

பாஜக கட்சி மேலிடமும், தேவேந்திர ஃபட்னாவீஸும், ஏக்நாத் ஷிண்டேவை (Eknath Shinde) மாநிலத்தின் முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். வேறு வழி இல்லாமல் நாங்களும், கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக ஒப்புக் கொண்டோம் என பேசினார்.

சிவசேனை கட்சியில் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து (Alliance with BJP) மகாராஷ்டிராவின் முதல்வராக ஜூன் 30-ஆம் தேதி பதவி ஏற்றார். ஜூலை 4-ஆம் தேதி ஆளுநர் கேட்டு கொண்டதற்கு இணங்க, மகராஷ்டிரா சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூப்பித்தார். இந்த‌ நிலையில், அம்மாநிலத்தின் பாஜக தலைவரின் பேச்சால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் கிளம்பி உள்ளது.