IAS officer rebukes girl: சானிட்டரி பேட் கேட்ட சிறுமிக்கு இலவச ஆணுறை வழங்க வேண்டுமா? என கேட்ட பெண் அதிகாரிக்கு பரவலாக கண்டனம்

condoms : பொது இடங்களில் இதுபோன்று பேசுவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னி கூறியுள்ளார்.

பீகார்: IAS officer rebukes girl : அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சானிட்டரி பேட் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான ஹர்ஜோத் கவுர் பும்ரா, பள்ளிகளில் சானிட்டரி பேட் வழங்க வேண்டும் என்று பாட்னாவில் ஏழை மாணவி ஒருவரை பகிரங்கமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கு வழிவகுத்தது.

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சம்ரிதாத் பீகார் திட்டத்தின் (Samridath Bihar Scheme) கீழ் பீகாரில் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்துவதற்கான ஒரு பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர், எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை அரசு தருமா..? என்று கேட்டார்.

உங்கள் கோரிக்கைகளுக்கு முடிவு உண்டா? இன்று பேட், நாளை ஜீன்ஸ், நல்ல ஷூ என அரசிடம் கேட்கலாம். கடைசியாக குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அரசு இலவச ஆணுறை தர வேண்டும் என்று கேட்கலாம். இதனால் வெட்கமடைந்த அந்த மாணவி, அடுத்த தேர்தலில் இந்த அரசுக்கு வாக்களிக்க மாட்டேன் (I will not vote for this government) என்று கூறினார். இதனையடுத்து, அந்த மாணவியை மிகவும் மோசமாக அந்த அதிகாரி திட்டி உள்ளார்..

வாக்களிப்பு விவகாரத்தை சிறுமி எழுப்பியதால், ஹர்ஜோத் கவுர் என்ற அதிகாரி, “வாக்களிக்க வேண்டாம்” (Do not vote) என்று கடுமையாக பதிலளித்தார். இது உங்கள் முட்டாள்தனம், நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் வாக்களிக்க கூட தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார். பெண் அதிகாரியின் இத்தகைய நடத்தைக்கு சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறுமிகளின் மன உறுதியை அதிகரிக்கும் பணியை ஐஏஎஸ் அதிகாரிகள் செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு அதிகாரி சிறுமியின் நம்பிக்கையை குலைக்க முயன்றுள்ளார். அது சரியல்ல. அதிகாரி பொது இடங்களில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னி (Social Welfare Minister Madan Sahni) தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கையை அடக்கினால், இந்த கேள்விகளை அரசிடம் யார் கேட்பார்கள்..? இது குறித்து இன்று எங்கள் துறை அதிகாரிகளுடன் பேசுவேன். மாநில பஞ்சாயத்து நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது (Provision of reservation for women) போன்ற பெண்களுக்காக, அரசாங்கம் ஏற்கனவே நிறைய செய்துள்ளது என்று சாஹ்னி கூறினார்.