Victory Day For Defeating Pakistan In The War: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

புதுடெல்லி: கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் (Victory Day For Defeating Pakistan In The War) பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி வெற்றி தினம் (விஜய் திவாஸ்) கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த வங்காளதேசம் சுதந்திரம் பெற்று தனி நாடாக மாறியது வரலாறு.

இந்நிலையில், பாகிஸ்தானை வெல்வதற்கு இந்திய ராணுவத்தினர் தங்களது இன்னுயிர்களை நீத்து இப்போரில் வெற்றியை நிலை நாட்டினர். அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதனை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: ‘‘1971 ஆண்டு போரின் போது நம்முடைய ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு படுத்துகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்தின் நலனுக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது’’ இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

முந்தைய செய்தியை பார்க்க:சதாம் உசேன் போல் தெரிகிறார்: அசாம் முதல்வர் ராகுல் காந்தியின் தோற்றத்தை கேலி செய்துள்ளார்

முந்தைய செய்தியை பார்க்க:Dil Raju Ready To Talk With Udhayanidhi Stalin: உதயநிதி கிட்டே நானே பேசுறேன்: வாரிசுக்காக தில்லாக கிளம்பும் தில் ராஜு