Foxes Sparrows In Tribal List: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குரவர், குருவிக்காரர் சமுதாயம்: மக்களவையில் நிறைவேறிய மசோதா

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் (Foxes Sparrows In Tribal List) இணைப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் தற்போது ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் தங்குவதற்கு வீடின்றி சாலையோரங்களிலும், செல்லும் இடங்களிலும் தார்பாய்களை கொண்டு வீடு அமைத்து தங்களின் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இதனால் இவர்களுக்கு என்று நிரந்தரமான வீடுகள் இன்றி நாடோடிகளாக சுற்றி வந்தனர். எனவே தங்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக நீண்டகாலமாக கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இதனை உணர்ந்த மத்திய அரசு அச்சமுதாயத்திற்கு உரிய அந்தஸ்த்தை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை கடந்த 13ம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், பழங்குடியினர் அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இதன் மூலமாக பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினருக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில்: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கையை வரவேற்கிறேன். நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகங்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவரது பதிவில் கூறியுள்ளார்.

அதே போன்று இந்த சட்டத்திருத்தம் நிறைவேறியதற்கு தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய முந்தைய ட்விட்டர் பதிவும், தற்போதைய பதிவில் கூறியிருப்பதாவது: 1965ஆம் ஆண்டு தொடங்கிய காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்தது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அதே போன்று அவரது பழைய பதிவில், நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு முண்டா அர்ஜீன் அவர்களுக்கும், தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தியை பார்க்க:Seizure of 8 kg Cannabis: அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல: இருவர் கைது

முந்தைய செய்தியை பார்க்க:சீனாவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பு: பெய்ஜிங்கில் லாக்டவுன்