Opposition to Shah Rukh Khan’s film: இந்து மதத்தை புண்படுத்தும் ஷாருக்கான் படத்திற்கு எதிர்பு

ஷாரூக்கான நடித்திருக்கும் பதான் என்ற இந்தி படத்திலிருந்து (Opposition to Shah Rukh Khan’s film) ‘பேஷ்ரம் ரங்’ என்ற பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பதான் படத்தை திரையிட முடியாது என்றும் தற்போது வடமாநிலங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் அதனை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஷாரூக்கானின் பதான் படமும் இடம் பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இருந்து பேஷ்ரம் ரங் என்கின்ற பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் தீபிகா ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார். அவர் அணிந்திருக்கும் காவி நிற நீச்சல் உடை, ‘பேஷ்ரம் ரங்’ என்கின்ற வார்த்தை வேண்டுமென்றே இந்துக்களின் மனம் புண்படும்படி ஷாரூக்கான் இப்படி செய்துள்ளார் என ஆவேசமாக கூறியுள்ளனர். பதான் படத்தை பார்க்க வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மத்திய பிரதேம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பதான் படத்தை திரையிட மாநில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஷாரூக்கானின் உருவப்படமும் எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Ranil Wickremesinghe : இலங்கையில் சிங்களா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்: அதிபர் ரணில் விக்ரமசிங்கே

முந்தைய செய்தியை பார்க்க:HP Company : ஹெச்பி நிறுவனம் 3 ஆண்டுகளில் 6000 ஊழியர்களை பணி நீக்கம்