Union Government withdraws export duty on Steel: எஃகு மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்ற அரசு

புதுடெல்லி: Union Government withdraws export duty on Steel. எஃகு மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த மே 22ம் தேதிக்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் மற்றும் செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

* 58 சதவீதத்திற்கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.
* 58 சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.
* இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.
* எச் எஸ் 7201, 7208, 7209,7210,7213, 7214, 7219, 7222 & 7227 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பன்றி இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வரி இல்லை.
* ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிக்கல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும் .
* கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும்.

இது 2022, நவம்பர் 19 முதல் நடைமுறைக்கு வரும். தற்போதைய நடவடிக்கைகள் உள்நாட்டு எஃகுத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும்; ஏற்றுமதியை அதிகரிக்கும்.