Maharashtra : அதிருப்தி அணியைச் சேர்ந்த 39 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அணி சிவசேனை வலியுறுத்தல்

Maharashtra political crisis: Uddhav Thackeray resigned as Chief Minister

மும்பை: Maharashtra : அதிருப்தி அணியைச் சேர்ந்த 39 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை அணி வலியுறுத்தி உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா? ஏக்நாத் ஷிண்டேவின் அரசு.

மகராஷ்டிராவில் சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 39 க்கும் மேற்பட்ட எம்.ஏல்.ஏக்கள் அதிருப்தி அடைந்து, உத்தவ் தாக்கரேவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவை பெரும்பானயை நிரூபிக்கும்படி மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ப‌கத்சிங் கோஷியாரி கோரினார். பெருபான்மையை நிரூபிப்பதற்கு முன்பு தனது பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்தார். இதனையடுத்து மகராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் ஆதரவுடன் பதவி ஏற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த‌ தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்.


இந்த நிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசை திங்கள்கிழமை (ஜூலை 4) பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ப‌கத்சிங் கோஷியாரி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தேர்தலில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 39 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை அணிக் கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை தங்களின் பெரும்பான்மையை நிரூப்பிக்கும் பணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஈடுபட்டுள்ளார் . பாஜக அணி சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெருவது உறுதி என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.