UAE President : ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா காலமானார்

UAE President Sheikh Khalifa bin Zayed
ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா காலமானார்

UAE President Sheikh Khalifa bin Zayed: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் இன்று காலமானார். 73 வயதான ஷேக் காலிபா நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் போராடி வந்தார். இவரின் மறைவுக்கு 40 நாள் துக்கம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக ஷேக் கலிபா பொறுப்பேற்றுக் கொண்டார். அபுதாபியின் மிகப் பெரிய பணக்காரரான இவரது தந்தை இவருக்கு முன்னர் முதல் அதிபராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ,ஷேக் கலிபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவரது சகோதரரான அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயித் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசர் போல தற்போது செயல்பட்டு வருகிறார். அதிபர் ஷேக் காலிபாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் ஷேக் காலிபாவின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஐக்கிய அரசு அமீரகத்தின் அதிபர் ஷேக் கேரளாவுடன் மிகுந்த நெருக்கமான உறவை கொண்டிருந்தார். அமீரகத்தை நவீன பாதைக்கு கொண்டு சென்ற சிந்தனை மிக்க தலைவர் இவர். இவரின் பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்’ என பினராயி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முறைப்படி கல்வி கற்காத ஷேக் கலிபா,தனது திறன் மிக்க செயல்பாடு காரணமாக துபாயை சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்க செய்தார். அத்துடன், அபுதாபியின் எண்ணெய் வளத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்தினார்.

இதையும் படிங்க: Malaikottai Thayumanavar Slogan: சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

UAE President Sheikh Khalifa bin Zayed