Elon musk: ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதிலிருந்து பின்வாங்குகிறாரா எலான் மஸ்க்?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

Elon musk: ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்து ஒப்பந்தம் மேற்கொண்டார்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை வாங்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ட்விட்டரில் கருத்து சுதந்திரத்தை நிலைநிறுத்துவதே பிரதான நோக்கம் என மஸ்க் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் போலி மற்றும் ஸ்பேம் கருத்துகளை பரப்பும் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் ஊடகம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டுரை சுட்டு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க், ட்விட்டர் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என ட்வீட் செய்துள்ளார். இதனால் எலான் மஸ்க் ட்விட்டர் டீல் விவகாரத்தில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் டீலை முழுமையாக முடித்து, அந்நிறுவனத்தின் சிஇஓவாக எலான் மஸ்க் பொறுப்பேற்கபோவதாக தகவல்கள் கூறப்பட்டன. இதையடுத்து தற்போதைய சிஇஓவான இந்தியாவைச் சேர்ந்த பிராக் அகர்வாலின் பதவி பறிபோகவுள்ளதாக பேசப்பட்டது. மேலும், ட்விட்டரின் வருவாயை விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்காமல் வேறு பல யுக்திகள் மூலம் பெற திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்து வந்தார். அத்துடன் ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டுவருவது, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை செயலுக்கு கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: Malaikottai Thayumanavar Slogan: சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்