Twitter lays off: இந்தியாவில் தனது ஊழியர்களை நீக்கிய ட்விட்டர்

புதுடெல்லி: Twitter lays off its Indian employees in mass numbers. இந்தியாவில் உள்ள தனது ஊழியர்கள் ஏராளமானோரை நீக்கி ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதற்குப்பின், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் சிஎப்ஓ உள்ளிட்ட பல அதிகாரிகளை உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து,

உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களை ட்விட்டர் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் அவர்களில் பலர் தங்கள் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரியில் உள்நுழைய முடியாததை அறிந்த பின்னரே அவர்கள் வேலை இழந்தது தெரிய வந்தது. இந்த பணிநீக்கம் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் பிற துறையை சேர்ந்தவர்களையும் ட்விட்டர் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரின் இந்திய ஊழியர் ஒருவர் கூறுகயைில், மஸ்க் இப்போது நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களைக் குறைக்க ஒரு பெரிய பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த பணிநீக்கம் தொடங்கியுள்ளது. எனது சக ஊழியர்கள் சிலருக்கு இது தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்பு வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ட்விட்டர் முன்னதாக ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில், ட்விட்டரை ஆரோக்கியமான பாதையில் செயல்பட வைக்கும் முயற்சியில், எங்கள் உலகளாவிய பணியாளர்களைக் குறைப்பதற்கான கடினமான செயல்முறையை வெள்ளிக்கிழமை மேற்கொள்வோம். அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சலை அனுப்பும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்திய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், நீங்கள் ஒரு அலுவலகத்தில் இருந்தால் அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இருந்தால், தயவுசெய்து வீட்டிற்குத் திரும்புங்கள் என்று ட்விட்டர் கூறியுள்ளது.