Edappadi Palaniswami : திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி

தில்லி : Edappadi Palaniswami wish Draupadi Murmu: இந்தியக் குடியரசு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை சந்தித்து அதிமுக இணைப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான‌ எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியக் குடியரசு தலைவராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் (president RamNath Govind) பதவி காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நடைபெற்ற தேர்தலில் திரௌபதி முர்மு குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் ஜூலை 25-ஆம் தேதி குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், திரௌபதி முர்முவை (Draupadi Murmu) தில்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மக்களை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அதன் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் (O. Panneer Selvam) ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, அங்கு பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவார்களுக்கு மோதல் நடைபெற்றது.

இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக வருவாய்த்துறை சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலக சாவியை தங்களின் ஒப்படைக்க வேண்டும் என பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் (High Court) வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவகத்தின் சாமி எடிப்பாடி பழனிசாமியிடம் ஓப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று தில்லிக்கு சென்றுள்ளார். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. தில்லியில் பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் (BJP senior leaders) அவர் சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே எம்.பி ரவீந்திரநாத்தை (MP Ravindranath) கட்சிலிருந்து நீக்குவது தொடர்பாக‌ மக்களவை சபாநாய‌கரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.