Kamal Haasan is proud: சூரரைப் போற்று 5 விருதுகளை பெற்றது பெருமை: கமல்ஹாசன்

சென்னை: proud that the movie Suraraipoortu has won 5 national awards: சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது பெருமையளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) வாழ்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) அறிவிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் (68th National Film Awards) நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த படத்திற்கான தேசிய விருதை (Best Film) சூரரைப்போற்று படமும், சிறந்த நடிகராக (Best Actor) அதேபடத்தில் நடித்த சூர்யாவும், சிறந்த நடிகைக்கான (Best Actress) அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி சூரரைப் போற்று படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான (Best Background Score) தேசிய விருதை பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதை (Best Screenplay) என மொத்தம் 5 விருதுகளை சூரரைப்போற்று படம் அள்ளிக்குவித்துள்ளது.

தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூரரைப்போற்று படத்திற்கும், அதில் நடித்த சூர்யா, அபர்ணா பாலமுரளிக்கும் திரைத்துறையினர் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் (KamalHassan) டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.