Congress chief Sonia Gandhi’s mother passes away: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா காலமானார்

புதுடெல்லி: Congress chief Sonia Gandhi’s mother passes away in Italy: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா காலமானார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனா, ஆகஸ்ட் 27 சனிக்கிழமையன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, கடந்த 27ம் தேதி சனிக்கிழமையன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். நேற்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன” என அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் தாயார் மைனாவுக்கு 90 வயதாகிறது. கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏற்கனவே இத்தாலியில் அவரது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்குப்பின் சோனியா காந்தியின் தாயார் உயிரழந்தது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை அடுத்து, பல்வேறு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோனியா காந்தி கொரோன தொற்று, அமலாக்கத்துறை விசாரணை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த அவருக்கு, தற்போது தாயார் பாவ்லோ மைனா உயிரிழந்தது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.