Snake in school’s midday meal: பள்ளி மதிய உணவில் பாம்பு.. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பிர்பூம்: Snake in Bengal primary school’s midday meal, students fall sick. மேற்கு வங்க பள்ளி மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்ததால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், மயூரேஷ்வர்2 தொகுதியின் தேகா பகுதியில் உள்ள மண்டல்பூர் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிறிய பாம்பு இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் அனைவரும் உடனடியாக ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அப்போது பள்ளியில் இருந்த 53 மாணவர்களில் 20 பேர் மதிய உணவை சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிய உணவை சமைத்த பள்ளி ஊழியர் ஒருவர், பருப்பு இருந்த கொள்கலன் ஒன்றில் பாம்பு இருந்ததாக கூறியதை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து, பள்ளிக்கு வந்த கிராம மக்கள், தலைமை ஆசிரியரை தாக்கியும், அவரின் காரையும் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து தொடக்கக் கல்வி வாரியத் தலைவர் பிரலோய் நாயக், ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்தார்.