Rs.7,183.42 crore released to 14 States: வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடி 14 மாநிலங்களுக்கு விடுவிப்பு

புதுடெல்லி: Revenue Deficit Grant (RDG) of Rs. 7,183.42 crore released to 14 States. மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள செலவினத் துறை வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு இன்று விடுவித்தது.

15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ. 86,201 கோடியை வழங்குமாறு 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 12 மாத தவணைகளாக இதனை வழங்க செலவினத்துறை பரிந்துரை அளித்துள்ளது. 2022 நவம்பர் மாதத்தில் 8-ஆவது தவணையுடன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியான அதிகாரப் பகிர்வுக்குப் பின் வருவாய் பற்றாக்குறை மானியம் (PDRDG) வெளியிடப்பட்டது

(கோடியில்)

வரிசை எண்மாநிலத்தின் பெயர்வது தவணை நவம்பர், 2022க்கு வெளியிடப்பட்டது.2022-23ல் மாநிலங்களுக்கு வெளியிடப்பட்ட மொத்த PDRDG.
1ஆந்திரப் பிரதேசம்879.087032.67
2அசாம்407.503260.00
3கேரளா1097.838782.67
4மணிப்பூர்192.501540.00
5மேகாலயா86.08688.67
6மிசோரம்134.581076.67
7நாகாலாந்து377.503020.00
8பஞ்சாப்689.505516.00
9ராஜஸ்தான்405.173241.33
10சிக்கிம்36.67293.33
11திரிபுரா368.582948.67
12உத்தரகாண்ட்594.754758.00
13மேற்கு வங்காளம்1132.259058.00