DoT announces IVRS-1955: செல்பேசி அழைப்பு குறைகளை தெரிவிக்க ஐவிஆர்எஸ் – 1955 சேவை

புதுடெல்லி: DoT announces IVRS-1955 feedback on call drop. செல்பேசி அழைப்புகளில் ஏற்படும் குறைகளை தெரிவிக்க ஐவிஆர்எஸ் – 1955 சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செல்பேசி அழைப்பின் போது ஏற்படும் குறைபாடுகளை சந்தாதாரர்கள் நேரடியாக தெரிவிப்பதற்கான ஐவிஆர்எஸ் – 1955 சேவையை மத்திய தொலை தொடர்புத் துறை அறிவித்துள்ளது. 1955 என்ற சுருக்கமான குறியீட்டு எண்ணில் சந்தாதாரர்களின் ஐவிஆர்எஸ் அழைப்புகள் ஏற்கப்படும்போது, குறைபாடுகள் பற்றிய சில கேள்விகள் கேட்கப்படும்.

மேலும் தொடர்ச்சியாக செல்பேசி அழைப்புகளின் குறைபாடுகளை எதிர்கொள்ளும் சந்தாதாரர்களின் பெருநகர்/ சிறு நகர்/ கிராமத்தின் பெயருடன் 1955 என்ற சுருக்கமான குறியீட்டு எண்ணில் சந்தாதாரர்கள் குறுஞ்செய்தியையும் அனுப்பலாம்.

இந்த சேவை எண்ணின் மூலம் செல்பேசி அழைப்பின் போது ஏற்படும் குறைபாடுகள், சரிசெய்யப்பட்டது பற்றிய தகவலை அனுப்பலாம். சந்தாதாரர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் சரியான செயல்பாடுகளுக்காக தொலை தகவல் சேவை வழங்குவோருக்கு பகிரப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.