GST compensation: மாநிலங்களுக்கான ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு

புதுடெல்லி: Centre releases Rs. 17,000 crore of GST compensation to States. மத்திய அரசு ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவித்துள்ளது.

2022 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ரூ.17,000 கோடியை, மத்திய அரசு 24.11.2022 அன்று விடுவித்தது. மேற்குறிப்பிட்ட தொகை உட்பட 2022-23-ஆம் ஆண்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.1,188 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

2022 அக்டோபர் வரை மொத்த வரிவசூல் ரூ.72,147 கோடி மட்டுமே என்றாலும் கூட, எஞ்சிய தொகையான ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து விடுவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிவரை வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வரியின் மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மாநிலங்கள், தங்களின் திட்டங்களை குறிப்பாக மூலதனச் செலவுகளை உறுதி செய்ய உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பெயர்(ரூ. கோடியில்)
ஆந்திரப் பிரதேசம்682
அசாம்192
பீகார்91
சத்தீஸ்கர்500
டெல்லி1,200
கோவா119
குஜராத்856
ஹரியானா622
ஹிமாச்சல பிரதேசம்226
ஜம்மு காஷ்மீர்208
ஜார்கண்ட்338
கர்நாடகா1,915
கேரளா773
மத்திய பிரதேசம்722
மகாராஷ்டிரா2,081
ஒடிசா524
புதுச்சேரி73
பஞ்சாப்984
ராஜஸ்தான்806
தமிழ்நாடு1,188
தெலுங்கானா542
உத்தரப்பிரதேசம்1,202
உத்தரகாண்ட்342
மேற்கு வங்காளம்814
மொத்தம்17,000