Rs.1,43,612 crore GST revenue: ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.43 லட்சம் கோடி

புதுடெல்லி: Rs.1,43,612 crore gross GST revenue collected in the month of August 2022. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.43 லட்சம் கோடியாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,43,612 கோடியாகும். இதில் மத்திய ஜிஸ்டி ரூ.24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42,067 கோடி உட்பட) ரூ.77,782 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூ.10,168 கோடி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,018 கோடி உட்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.29,524 கோடியையும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.25,119 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. முறைப்படியான பைசலுக்கு பின், 2022 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.54,234 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.56,070 கோடியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,12,020 கோடி என இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாயில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தைவிட பொருட்கள் இறக்குமதி மூலமான வருவாய் 57 சதவீதமும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் (சேவைகள் இறக்குமதி உட்பட) 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.8,386 கோடியாகி 19 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. புதுச்சேரியில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.156 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200 கோடியாகி 28 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மாநில வாரியான ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி

மாநிலம்ஆகஸ்ட்-21ஆகஸ்ட்-22வளர்ச்சி
ஜம்மு காஷ்மீர்39243411%
ஹிமாச்சல பிரதேசம்7047091%
பஞ்சாப்1,4141,65117%
சண்டிகர்14417924%
உத்தரகாண்ட்1,0891,0940%
ஹரியானா5,6186,77221%
டெல்லி3,6054,34921%
ராஜஸ்தான்3,0493,34110%
உத்தரப்பிரதேசம்5,9466,78114%
பீகார்1,0371,27123%
சிக்கிம்21924713%
அருணாச்சல பிரதேசம்535911%
நாகாலாந்து323818%
மணிப்பூர்4535-22%
மிசோரம்162878%
திரிபுரா56560%
மேகாலயா11914723%
அசாம்9591,05510%
மேற்கு வங்காளம்3,6784,60025%
ஜார்கண்ட்2,1662,59520%
ஒடிசா3,3173,88417%
சத்தீஸ்கர்2,3912,4422%
மத்திய பிரதேசம்2,4382,81415%
குஜராத்7,5568,68415%
டாமன் மற்றும் டையூ114%
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி25431022%
மகாராஷ்டிரா15,17518,86324%
கர்நாடகா7,4299,58329%
கோவா28537632%
லட்சத்தீவு10-73%
கேரளா1,6122,03626%
தமிழ்நாடு7,0608,38619%
புதுச்சேரி15620028%
அந்தமான் நிக்கோபார் தீவுகள்2016-21%
தெலுங்கானா3,5263,87110%
ஆந்திரப் பிரதேசம்2,5913,17322%
லடாக்141934%
பிற பிரதேசம்109224106%
மைய அதிகார வரம்பு214205-4%
மொத்தம்84,4901,00,52619%