Rajasthan earthquake : ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 2.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானேருக்கு வடமேற்கே 236 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது (rajasthan earthquake). இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ( earthquake) ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 2.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானேரில் இருந்து வடமேற்கே 236 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான், உத்தரபிரதேச தலைநகர் லக்னோ உட்பட பல இடங்களில் நிலநடுக்கத்தின் தீவிரம் பதிவானது. சனிக்கிழமை இரவு, நிலநடுக்கத்தின் மையம், வடக்கு மற்றும் வடகிழக்கில், உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் (Uttar Pradesh capital Lucknow ) இருந்து 139 கி.மீ தொலைவில் பதிவானது. பல இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இரவில் பூமி குலுங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர். இதனால் கவலை அடைந்த மக்கள் வீட்டிற்கு வெளியேயே நேரத்தைக் கழித்தனர். உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சேதம் ஏதும் இல்லை.தற்போது மீண்டும் ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இதனால், மக்களின் கவலை அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேசத்திலும் (Uttar Pradesh) பூமி அதிர்ந்தது

லக்னோ: உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த இரு தினங்களுக்கு முன் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. (UP Earthquake) ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.கடந்த சனிக்கிழமை இரவு 1 மணி 12 நிமிடங்களில் லக்னோவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவில் பூமி குலுங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். சில இடங்களில் மக்கள் அச்சத்துடன் வயல் வெளிகளில் இரவைக் கழித்ததாக கூற‌ப்படுகிறது.

இந்த நில நடுக்கத்தின் மையம் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 139 கி.மீ தொலைவில் வடக்கு மற்றும் வடகிழக்கில் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 5.2 ஆக பதிவாகியிருந்த போதிலும் (the magnitude of the earthquake was recorded as 5.2), அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.