Job fair :10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அக்.22ம் தேதி வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கி வைக்கிறார் பிரதமர்

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.

புதுடெல்லி:Job fair : நாட்டின் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வேலை வாய்ப்பு கண்காட்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த பிரமாண்ட நிகழ்வு அக்டோபர் 22 முதல் நடைபெறுகிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது புதிதாக நியமிக்கப்பட்ட சுமார் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்படும். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி (As directed by PM Modi), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.

மத்திய அரசின் 39 துறைகள்/அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நாடு முழுவதும் உள்ளவர்கள் சேருவார்கள். ஆட்சேர்ப்பு செயல்முறை குரூப் ஏ, குரூப் பி (கெசட்டட்), குரூப் பி (கெசட்டட் அல்லாத) மற்றும் குரூப் சி பிரிவில் நடைபெறும். மத்திய ஆயுதப்படை பணியாளர்கள்(Central Armed Forces Personnel), சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ்.

இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் (To provide employment to the youth) குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்குமான‌ திட்டமாகும். பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்த ஆள்சேர்ப்பு பணி நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சில ஆட்சேர்ப்பு செயல்முறைகள் அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்படும். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) போன்ற ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள் மூலம் மேலும் சில பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஆயுதமாக வைத்துக்கொண்டு பாஜக‌ அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசார‌ம் (Opposition parties are campaigning against the BJP government) செய்து வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இத்தனைக்கும் மத்தியில், பிரமாண்ட வேலை வாய்ப்பு கண்காட்சியை பிரதமர் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.