Prime Minister condoles Himachal Pradesh accident: இமாச்சலப் பிரதேச விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: Prime Minister condoles those killed in Himachal Pradesh accident. இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சார் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., சுரேந்தர் ஷோரி, நள்ளிரவு 12.45 மணியளவில் தனது சமூக ஊடக கணக்கு மூலம் பேஸ்புக் நேரலையில் வீடியோ ஒன்றை ஸ்ட்ரீம் செய்தார், பஞ்சார் உட்பிரிவில் உள்ள கியாகி அருகே நடந்த விபத்து குறித்து மக்களுக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் முதலில் பஞ்சார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் குலு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்

ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இமாச்சல பிரதேசத்தின் குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

நவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரியின் தொடக்கத்தில் மோடி ஷைலபுத்ரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார். மேலும், அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“சக்தி வழிபாட்டின் சிறந்த திருவிழாவான நவராத்திரியில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நம்பிக்கையின் மங்கலகரமான இந்த நாளில், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், உற்சாகமும் உண்டாகட்டும். ஜெய் மாதா”

நவராத்திரி விழா இன்று முதல் ஷைலபுத்ரி தேவி வழிபாட்டுடன் தொடங்குகிறது. அவரது அருளால் அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், சிறந்த ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டுகிறேன்”. என தெரிவித்துள்ளார்.