Tourist vehicle rolls off : சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது: 7 பேர் பலி, 10 பேர் காயம்

7 dead, 10 injured : இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றுலா வாகனம் குன்றின் மீதிலிருந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேசம்: tourist vehicle rolls off : சுற்றுலா வாகனம் குன்றின் மீது கவிழ்ந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 305 இல் நடந்தது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சுற்றுலா வாகனத்தில் ஓட்டுநர் உட்பட பதினேழு பேர் பயணித்ததாக குலு மாவட்ட துணை ஆணையர் அசுதோஷ் கார்க் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, பேருந்து ஓட்டுநர் உட்பட பதினேழு பேர் (Seventeen people including the bus driver) வாகனத்தில் பயணித்துள்ளனர். போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. காயமடைந்தவர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குலு மாவட்ட துணை ஆணையர் அசுதோஷ் கர்க் தெரிவித்தார்.

குலு போலீஸ் சூப்பிரண்டு குர்தேவ் சிங்கும் (Kullu Superintendent of Police Gurdev Singh) இந்த விவகாரம் குறித்து பேசுகையில், விப‌த்தில் ஏழு பேர் இறந்தனர் மற்றும் பத்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த ஐந்து பேர் குலுவில் உள்ள மண்டல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் மற்றும் ஐந்து பேர் பஞ்சாரிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலைப்பகுதியில் சிக்கித் தவித்த 83 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

கனமழை காரணமாக ட்ரையண்ட் மலைப்பகுதியில் சிக்கித் தவித்த எண்பத்து மூன்று சுற்றுலாப் பயணிகள் (Tourists)ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக தர்மசாலா துணைப் பிரதேச மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், 11 பேர் திரியுண்டில் சிக்கித் தவித்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது, எங்கள் மீட்புக் குழு மாலை 5 மணியளவில் அங்கு சென்றடைந்தது. ஆனால், மொத்தம் 83 பேர் (83 people)இருப்பதாக எங்கள் குழு தெரிவித்தது என்று எஸ்டிஎம் தெரிவித்தார்.