Prime Minister condoles death of Queen of England: இங்கலாந்து ராணியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: PM pays condolences after the demise of Her Majesty Queen Elizabeth. இங்கலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித் துவந்தார். மருத்துவக்குழுவினர் கண்காணிப்பில் இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் இன்று உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில், “சமகாலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணியை என்றென்றும் நமது நினைவுகளில் நிலைத்திருப்பார். தேசத்திற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடித்தவர். அவருடைய மறைவால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது சிந்தனைகள் அவருடைய குடும்பம் மற்றும் பிரிட்டன்வாழ் மக்களோடு இருக்கின்றன”.

”கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் என்னுடைய பிரிட்டன் பயணங்களின்போது இரண்டாம் எலிசபெத் ராணியை சந்தித்த அனுபவங்கள் எளிதில் மறக்க இயலாது. அவருடைய வரவேற்பையும், அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. எங்களது ஒரு சந்திப்பில் அவருடைய திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசாக வழங்கிய கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அந்த நிகழ்வை என்றென்றும் நினைவில் கொள்வேன்”.

இவ்வாறு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.