building collapse in Delhi: டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; இடிபாடுகளுக்குள் 5 பேர்.. இருவர் காயம்

புதுடெல்லி: building collapse in Delhi Azad market area. டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம், 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

தேசியத் தலைநகர் ஆசாத் மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று கட்டிடம் இடிந்து விழுந்ததில், இருவர் காயமடைந்தனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறையின் தகவலின்படி, ஏற்கனவே மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

“ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன” என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

டெல்லியின் ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.