President Draupadi Murmu Speech: 74வது குடியரசு தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்

டெல்லி: இந்திய நாடு 74-வது குடியரசு தினத்தை நாளை (ஜனவரி 26) கோலாகலமாக (President Draupadi Murmu Speech) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 25) உரையாற்றுகிறார்.

இது பற்றி ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25ம் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதனை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்கிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.