POCSO court Judge found dead: போக்சோ நீதிமன்ற நீதிபதி மர்மமான முறையில் மரணம்

கட்டாக், ஒடிசா: போக்சோ நீதிமன்ற நீதிபதிஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் (POCSO court Judge found dead), ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றி வந்தார். விடுமுறையில் சென்ற அவர், மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

கட்டாக்கில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபாஷ் குமார் (Special Court Judge Subhash Kumar) பிஹாரியின் உடல் வெள்ளிக்கிழமை அவரது அரசு இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கட்டாக் மண்டலம்-3 பிரிவின் ஏசிபி தபஸ் சந்திரா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலை எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

நீதிபதி சுபாஷ் குமார் பிஹாரியின் ஸ்டெனோகிராஃபர் மகாபத்ராவின் (Stenographer Mahabhatra) கூற்றுப்படி, இரண்டு நாள் விடுமுறைக்கு சென்ற நீதிபதி, வெள்ளிக்கிழமை பணிக்கு வரவிருந்தார். இருப்பினும், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நீதிபதிக்கு, மகாபத்ரா போன் செய்துள்ளார். போனில் பேசிய நீதிபதி சுபாஷ் குமார் பிஹாரி தனக்கு மேலும் 2 நாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டு, விடுப்பிற்கு விண்ணப்பம் எழுதக் கூறியதாக தெரிவித்தாராம். எனினும், சிறிது நேரத்தில் நீதிபதியின் உடல் சந்தேகத்திற்கிடமான தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டது.

மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத போது இந்த சம்பவம் நடந்துள்ளது (The incident took place when the wife and children were not at home). அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நீதிபதியை மருத்துவமனையில் அனுமதிக்க முற்பட்ட போதும், ஏற்கெனவே அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பிரச்னை என்றால், போலீசாரிடமும், நீதிமன்றத்திற்கும் செல்கின்றனர். ஆனால் நீதி வழங்கும் நீதிபதிக்கே பிரச்னை என்றால் (If the problem is with the judge) அவர்கள் யாரிடம் செல்வார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், நீதிபதிகளுக்கு தங்கள் சொந்த பிரச்னைகளை வேறு நபர்களிடம் கூறுவதற்கு மனம் இடம் தராது. இதனை அவர்கள் கௌரவ பிரச்னையாக கருதுகின்றனர். இது உலவியல் ரீதியான ஒரு பிரச்னையாக அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற‌னர்.