PM to participate in Griha Pravesham: 4.5 லட்சம் வீடுகளின் கிரகப் பிரவேசத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: PM to participate in ‘Griha Pravesham’ of more than 4.5 Lakh beneficiaries of PMAY-G in Madhya Pradesh. தந்தேராஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின் (ஊரகம்) 4.5 லட்சத்திற்கும்அதிகமான பயனாளிகளின் ‘கிரகப் பிரவேசம்’ நிகழ்வில் அக்டோபர் 22 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கிறார்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டமான ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 2022ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்த்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு மானியமாக கொடுக்கப்பட்ட தொகை 1,20,000 ரூபாயாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2019 வரை 83.63 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கபட்டு, 26.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்த தொகையான ரூ.4,95,838 கோடியில், தற்போது வரை 5144.5 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இத்திட்டதுக்கான தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்கீடு செய்கின்றன.

2019-2020 வரை ரூ.1,20,000-ஐ மானியமாக வழங்கிய அரசு, 2021-2022 ஆண்டு 1,70,000 ரூபாயாக உயர்த்தியது. அரசு கொடுக்கும் இந்த தொகை நான்கு கட்டங்களாக வங்கிகணக்கில் போடப்படுகிறது. இதற்கான வீட்டின் அளவு 269 சதுர அடிக்கு மேல் இருக்கலாமென கூறியுள்ளது. கழிவறைக்கான தொகையாக 12,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 35000 கோடியில் ஏறக்குறைய 29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தந்தேராஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின் (ஊரகம்) 4.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் கிரகப் பிரவேச நிகழ்வு அக்டோபர் 22 ஆம் தேதி மத்திய பிரதேசம் சத்னாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் காணொலி காட்சி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு சொந்த வீடு வழங்குவது என்பது பிரதமரின் தொடர் முயற்சியாகும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய பிரதேசத்தில் இதுவரை சுமார் 38 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ரூ. 35000 கோடி செலவில் 29 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.