PM Modi’s mother admitted to hospital: பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: Prime Minister Narendra Modi’s mother Heeraben Modi has been hospitalised after her health deteriorated last night. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 99 வயதை எட்டிய ஹீராபென் மோடி, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து வருவதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தாய் ஹீராபென் மோடியை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நேற்று கர்நாடகா மாநிலம், மைசூருவில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்புறம் சேதமாயின. இந்த விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரன் பிரஹலாத் மோடி காயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.