PM Modi to visit state :பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைக்க நவ.11ல் பிரதமர் மோடி மாநிலத்திற்கு வருகை: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : PM Modi to visit state on November 11 to initiate development work: Chief Minister Basavaraj Bommai : பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைக்க நவ.11ல் பிரதமர் மோடி மாநிலத்திற்கு வருகை புரிகிறார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

நவம்பர் 11-ம் தேதி பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். விழாவின் அனைத்து விவரங்களையும் சேகரித்து, இந்த செயல்பாடுகள் குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அன்றைய தினம், மாநிலத் தலைநகரில் பெங்களூரு வழியாக சென்னை மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (South India’s first Vande Bharat Express train) சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இதன் மூலம் கூடுதல் பயணிகளுக்கு சேவை வழங்க முடியும். ரூ. 5,000 கோடி செலவில் கட்டப்பட்ட கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைக்கிறார்.

கோடிக்கணக்கில் பயணிக்கும் பொதுமக்கள், உருவாக்கப்பட்ட ஒரு தோட்டத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரத கால மரக்கன்றுகள் (In the garden, saplings from Ramayana and Mahabharata period) இருக்கும். அங்கு பயன்படுத்தும் நீர் மறுபயன்பாடு மற்றும் குறைந்த மின் சக்தி நுகர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரமுள்ள நாடப் பிரபு கெம்பேகவுடா சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் வந்திதா சர்மா ( Chief Secretary Vandita Sharma) , முதல்வரின் முதன்மைச் செயலர் என்.மஞ்சுநாத் பிரசாத், கூடுதல் தலைமைச் செயலர் (ஐடி/பிடி) டாக்டர் ஈ.வி.ரமணரெட்டி, ஏசிஎஸ் (உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை) கௌரவ் குப்தா, பெங்களூரு நகர காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம், ரயில்வே வாரியம், சிவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.