PM lauds Indian civil aviation: அதிக பயணிகளை ஏற்றி சாதனை படைத்த விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: PM lauds Indian civil aviation for highest ever numbers of passengers. அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தினசரி 4 லட்சம் பயணிகளை எட்டியதுடன், கொவிட்-19 காலத்திற்கு முன்பு இருந்ததை விட சாதனை எண்ணிக்கையை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது ‘எளிதாக வாழ்வதற்கும்’ பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானது என்றும் மோடி கூறியுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி கூறிய பிரதமர் , “சிறந்த அறிகுறி. இந்தியா முழுவதும் இணைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இது எளிதான வாழ்க்கை, மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்”. என தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனின் 80-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து

அமிதாப் பச்சனின் 80-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளை சேர்ந்த ரசிகர்களை தமது நடிப்பால் பரவசப்படுத்தி, மகிழ்வித்த அமிதாப் பச்சன் இந்தியாவின் திரையுலக ஆளுமைகளில் மிகச்சிறந்தவர் என மோடி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “மிகவும் மகிழ்ச்சிமிக்க 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிதாப்பச்சன் ஜி. பல தலைமுறைகளை சேர்ந்த ரசிகர்களை தமது நடிப்பால் பரவசப்படுத்தி, மகிழ்வித்த அவர், இந்தியாவின் திரையுலக ஆளுமைகளில் மிகச்சிறந்தவர் ஆவார். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்”. என தெரிவித்துள்ளார்.