Margaret Alva files nomination : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

vice presidential candidate : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கர்நாடகத்தைச் சேர்ந்த‌ மார்கரெட் ஆல்வா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தில்லி: Margaret Alva files nomination : நாட்டின் தற்போதைய 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட‌ எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக‌ யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர். இருவரின் தலைவிதியும் வாக்குப்பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணிய பிறகு உறுதியாகயுள்ளது.

இந்த தேர்தலுக்கு பின்பு, குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கும் மத்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த (Belongs to Karnataka) மார்கரெட் ஆல்வா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜக்தீப் தன்காட் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மார்கரெட் ஆல்வா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தற்போது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வரும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் முன்னிலையில் இன்று மார்கரெட் ஆல்வா நாடாளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் யார்? என்பது தெரியவரும். குடியரசு துணைத் தலைவர் யார் ? என்பது ஆக. 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றவுடன் அன்றே வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று துணை குடியரசு தலைவர் யார் என்பது தெரிய வரும்.

Also Read : TN Electricity Bill: மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Also Read : Kallakurichi Riots: தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அதிரடி

opposition vice presidential candidate Margaret Alva filed nomination