NIT Rourkela Admission Application Launch: ரூர்கேலா என்ஐடி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் துவக்கம்

ரூர்கேலா: NIT Rourkela Admission Application Launch. என்.ஐ.டி ரூர்கேலாவின் CSAB-2022 மற்றும் JoSAA இணைந்து நடத்தும் ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்பம் ரூர்கேலா (என்ஐடி ரூர்கேலா), என்ஐடி, ஐஐஇஎஸ்டி, ஐஐஐடி,ஸ்பா (திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி), ஜிஎஃப்டிஐ (அரசு நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்) போன்ற என்ஐடி + சிஸ்டம் என்றழைக்கப்படும் பல்வேறு இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக 2022ம் ஆண்டிற்கான மையப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை செயல்படுத்துகிறது.

12-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது 12ம் வகுப்பு தேர்வில் முதல் இருபது சதவீதம் மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதித் தேர்வை 2022 -23ஆம் கல்வி ஆண்டில் ஒருமுறை நடவடிக்கையாக உரிய கல்வி வாரியத்தால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

JoSAA சுற்றுகள் மூலம் இடஒதுக்கீட்டிற்கான பதிவு 12 செப்டம்பர் 2022 அன்று தொடங்குகிறது. CSAB – சிறப்பு சுற்றுகளுக்கான பதிவு JoSAA சுற்றுகள் அனைத்தும் முடிந்த பின்னர் 24 அக்டோபர் 2022 அன்று தொடங்கும். ஒட்டுமொத்த கலந்தாய்வு பணிகள் அனைத்தும் 6 நவம்பர் 2022 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JoSAA, CSAB சிறப்பு சுற்றுகள் ஆகியவற்றின் மூலம் ஏறத்தாழ 2.2 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. JoSAA-விற்கு மொத்தம் 54,477 மாணவர் சேர்க்கை இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து 23 ஐஐடி-க்கள், 31 என்ஐடி-க்கள், 26 ஐஐடி-க்கள், 30 ஜிஎஃப்டி-கள், ஒரு ஐஐஇஎஸ்டி ஆகியவற்றில் JoSAA கலந்தாய்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

செப்டம்பர் 12 : JoSAA-க்கான பதிவு செயல்முறை தொடங்குகிறது
செப்டம்பர் 23–அக்டோபர் 16 : ஆறு சுற்றுகளாக JoSAA நடத்தப்படும்
அக்டோபர் 24: JoSAA சுற்றுகளுக்கு பிறகு காலியிடங்கள் வெளியிடப்படும்
அக்டோபர் 24: CSAB சிறப்பு சுற்றுகள் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான பதிவு தொடங்கும்
அக்டோபர் 29 – நவம்பர் 6 : CSAB-வின் 2 சிறப்பு சுற்றுகள் நடத்தப்படும்.
நவம்பர் 7: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு

மேலும் விவரங்களுக்கு : JoSAA அதிகாரபூர்வ வலை தளமான http://josaa.nic.in யை பார்வையிடவும். இது தவிர CSAB-வின் அதிகாரபூர்வ இணையதளமான http://csab.nic.in -க்குச் சென்று jossa-ல் நுழையவும்.