New Covid Variants: புதிய கொரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: புதியதாக உருமாறிய (New Covid Variants) கொரோனா வைரஸ் தொற்று உருவாகியிருப்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முககவசம் அணிவதை மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 22) மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சு க் மாண்டவியா பேசியதாவது: உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் வைரஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வைரஸ் பரவலை உலகளவிலும் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் புதிய வைரஸ் மாறுபாட்டை சரியாண நேரங்களில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றை எதிர்த்து போரிடுவதற்கு மாநில அரசுகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 220 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Former Minister Sellur Raju: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்டவர்கள் கிடைத்தால் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

முந்தைய செய்தியை பார்க்க:Former Minister kp anbalagan inaugurated: பாலக்கோடு: அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்