NCRB reports : பெரும் நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று என்சிஆர்பி தகவல்

NCRB reports that big cities are not safe for women : 2021 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, தேசிய தலைநகர் தில்லியில், ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டு மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லியில் 2021ல் பெண்களுக்கு எதிராக மொத்தம் 13,892 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 இல் இந்த எண்ணிக்கை 9782 ஆக இருந்தது. இதனால், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 19 பெருநகரங்களில், தில்லியில் மட்டும் சராசரியாக 32.20 சதவீதம் குற்றங்கள் நடைபெறுகின்றன (Delhi alone has an average crime rate of 32.20 percent). தில்லிக்குப் அடுத்தப் படியாக‌ வர்த்தகத் தலைநகரான மும்பையில் 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 5,543 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருக்கு 3 வது இடம்: தில்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மாநில தலைநகர் பெங்களூருவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது (Bengaluru is also known as an unsafe city for women). தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையின்படி, 2021 இல் பெங்களூரில் பெண்களுக்கு எதிராக 3127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 பெருநகரங்களில், பெங்களூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.2 சதவீதமாகும்.

பாலியல் தொழில், கணவர்களால் கொடுமைப்படுத்துதல், சிறுமிகளை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களால் பெண்கள் சிரமப்படுகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 2021 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி, மெட்ரோ பாலிடின் நகரங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன (Most cases of rape of girls are reported in metro politan cities) என்பது அறியப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் பெண்கள் மீதான பாலியல் வழக்குகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி வருகிறது. என்றாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.