Ganesh Chaturthi : ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழா: மாநகராட்சியின் வரலாற்று முடிவு

ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலையை நிறுவி வழிபட ஸ்ரீராம் சேனா தலைவர் உட்பட பலரை அனுமதிக்க வேண்டும் என்று ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஹூப்ளி: (Ganesh Chaturthi Hubli Eidga Maidan) மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாமராஜ்பேட்டை ஈத்கா மைதானத்திற்கு பிறகு, ஹூப்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழாவை நடத்த‌ அரசு அனுமதி அளித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை ஹூப்ளி மாநகராட்சி அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலைக்கு 3 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்படும் என ஹூப்ளி மாநகராட்சி மேயர் எரேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹூப்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியொட்டி விநாயகர் திருவிழாவை நடத்த அனுமதி கோரி மொத்தம் 6 அமைப்பினர் விண்ணப்பம் அளித்தனர், விநாயகர் சதுர்த்தியை அனுமதிக்கக் கூடாது என 11 பேர் விண்ணப்பம் அளித்தனர். இது குறித்து விளக்கம் அளித்த மேயர் எரேஷ், அனைத்து கட்சியினர் முன்னிலையில் விநாயகர் திருவிழா நடத்துவது தொடர்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களுக்கு விநாயகர் திருவிழாவிற்கு அனுமதி (Permission for 3 days of Ganesha festival) வழங்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

ஹூப்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை நிறுவி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் (Sri Rama Sena President Pramod Muthalik) உட்பட பலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் விநாயகர் முககவசம் அணிந்து விநாயகர் திருவிழாவிற்கு அனுமதி வழங்கக் கோரி மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்காவிட்டால், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களின் வீடுகள் முன்பு விநாயகர் சிலை வைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இத்தனையும் நடைபெற்ற‌ பிறகு தற்போது 3 நாள் விநாயகர் திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விநாயகர் திருவிழா காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய இடமான ஹூப்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் திருவிழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்து ஏற்கனவே பெரும் விவாதம் நடைபெற்ற‌து. இது அரசிற்கு பெரும் சவாலான முடிவாக இருந்தது (It was a very challenging decision for the government). பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமான முடிவாகவும் கருதப்படுகிறது.