President Ram Nath Govind : 21-ம் நூற்றாண்டை இந்தியாவிற்கானதாக‌ மாற்ற நாடு தயாராகி வருகிறது : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

File photo.

தில்லி: President Ram Nath Govind : தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இந்தியக் குடியரசு தலைவராக‌ தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் மகிழ்ச்சி. குடியரசு தலைவராக‌ எனது பதவி காலம் நிறைவு பெறுகிறது.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டிற்கு சேவை செய்ய மிக உயர்ந்த பொறுப்பு கிடைத்தது ஜனநாயகம் கொடுத்த பரிசாகும் (Democracy given gift). மக்களுக்கும் பொது பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாடு முழுவதும் மேற்கொண்ட பயணங்களால் மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) பங்கு சிறப்பானது. இளைஞர்கள் தங்கள் கிராமம் மற்றும் பயின்ற பள்ளி, ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் பாரம்பரியத்தை தொடர வேண்டும். நமது பாரம்பரிய வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாசாரத்தின் சிறப்பாகும்.

ராணுவம், துணை ராணுவம், ஆயுதப்படையினர், காவல்துறையினரின் பணிகள் சிறப்பானது. அவர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பை போற்றுகிறேன். அவர்களின் தேச பக்தி (Patriotism) வியக்கத்தக்கது. அது நமக்கு ஊக்கமளிக்கிறது.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில காலகட்டங்களிலேயே ஒவ்வொருவரும் விதிவிலக்கான சிந்தனைகளை கொண்ட சிறந்த தலைவர்களை (Great leaders) கொண்டிருப்பதில் இந்தியாவை போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த நாடும் பெற்றதில்லை என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன்.

எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் (Everyone should have access to basic amenities) என்பதே அரசின் குறிக்கேளாகும். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.